ஈரான் ஜன, 29
ஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். அங்கிருக்கும் கோய் நகரில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11.44க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் விக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது .எழுபது பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு அண்டை நாடான அஜர்பைஜானிலும் உணரப்பட்டுள்ளது.