சென்னை ஜன, 26
குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கூட்டங்களில் ரேஷன் கடைகள் தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்தும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.