துபாய் ஜன, 16
ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் மற்றும் லூலூ இணைந்து நடத்திய தமிழர் திருநாள் பொங்கல்தின கொண்டாட்டம். க்ரீன் குளோப் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் ஜாஸ்மீன் தலைமையில் அல்மாஷா ஒருங்கிணைப்பில் ஷார்ஜா அல்புதீனா லூலூ மாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் குழந்தைகள் மற்றும் டிக்டாக் பிரபலம் சமியுக்ஸ்சா உள்ளிட்டோரின் நடன நிகழ்ச்சிகள், வணக்கம் ஹபீபீ குழுவினரின் கலை நிகழ்ச்சி, ஜனனி மற்றும் பிரதீப்பின் பாடல், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடை அணிவகுப்பு மற்றும் நாச்சியா குழுவினரின் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக கேப்டன் டிவி முதன்மை வளைகுடா நிருபர் கமால் கேவிஎல், அன்வர் குழும நிறுவனர் அன்வர் அலி, சமூக ஆர்வலர் ராசிக், சென்னை கிங்ஸ் உணவாக நிறுவனர் அஸ்கர், மீடியா7 அஸ்கர், தமிழ் தேசிய நாளிதழ் தினகுரல் முதன்மை நிருபரும் வணக்கம் பாரதம் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா,மென்டர் லீப் ஸ்போர்ட்ஸ் ரமேஷ் ராமகிருஷ்ணன், எஸ் ஈவென்ட் ஆனந்த், A2B நிர்வாகி ராஜு, இமான் பொதுச்செயலாளர் யாசின், சஃபா மார்பல்ஸ் வஹிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டானர்.
மேலும் இவ்விழாவினை ஆண்ட்ரியா மற்றும் சமீர் தொகுத்துவழங்க ஒருங்கிணைப்பாளர்களாக சமீர், எஸ்பிஎஸ் நிஜாம், அஸ்லம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிறைவாக கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாஸ்மின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மேலும் லூலூ சென்டர் மேலாளர் மற்றும் நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.