ராமநாதபுரம் ஜன, 14
ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து சித்தார் கோட்டையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், உதவி ஆட்சியர் நாராயண சர்மா ஆகியோர் உள்ளனர்.