சாத்தான்குளம் ஆகஸ்ட், 10
தூத்துக்குடி மாவட்டம், சாத்தன் குளம் 75-வது சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை நடந்தது. முன்னதாக தேசிய கொடியேந்திய பாதயாத்திரை சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயம் முன்பிருந்து தொடங்கி நடை பயணமாக பழைய பஸ் நிலையம், முக்கிய வீதி வழியாக புதிய பஸ் நிலையம் வந்து அடைந்தது. அங்கு பாதயாத்திரை தொடக்க விழா நடந்தது. பாதயாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் தொடங்கி வைத்தார். சட்ட மன்ற உறுப்பினர்கள் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார தலைவர்கள் சற்குரு, நல்லகண்ணு, சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, ஆத்தூர் நகர தலைவர் பாலசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.