Spread the love

அமெரிக்கா ஜன, 7

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6 ம்தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிப்பதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 5 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சூழலில் நாடாளுமன்ற கலவரத்தின்போது பணியில் இருந்த பிரையன் சிக்னிக் என்கிற காவல் அதிகாரி கலவரம் நடந்த மறுநாள் அதாவது ஜனவரி 7 ம் தேதி பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்தார். கலவரத்தில் பிரையன் சிக்னிக்குக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என டாக்டர்கள் கூறியபோதும், கலவரம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் காவல் அதிகாரி பிரையன் சிக்னிக் மரணத்துக்கு டிரம்ப் தான் காரணம் என கூறி அவர் மீது காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். வாஷிங்டன் நகர கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் டிரம்பிடம் இருந்து 10 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.82 கோடியே 63 லட்சம்) இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *