சென்னை ஜன, 7
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முன் அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. விதிகளின் அடிப்படையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட வேண்டும். விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி குற்றம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.