புதுடெல்லி ஜன, 6
டெல்லியில் ஒரே மாதத்தில் 7,046 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. சுற்றுச்சூழல் மாசை குறித்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மாநில முழுவதும் 2,300க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளது. இதன் எதிரொலியாக இந்த ஆண்டு மின்சார வாகன விற்பனை 86 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. நாட்டில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.