Spread the love

கீழக்கரை ஜன, 2

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று காலை 11 மணிக்கு நமது கே.எல்.கே. வெல்ஃபேர் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் KLK வெல்ஃபேர் கமிட்டியின் அவைத்தலைவருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையில் ஜின்னாதெரு செய்யதுல் ஹஸனாத் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளி இமாம் செய்யது இப்ராகீம் ஆலிம் இறைமறை வாசிக்க மின்ஹாஜ் பள்ளி ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது ஆலிம் வரவேற்புரையுடன் கீழை ஜஹாங்கீர் அரூஸி மூன்று மாத செயல் திட்டங்களையும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களையும் அறிக்கையாக சமர்ப்பித்தார்.

மேலும் தலைமை உரையாற்றிய அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் ஏழை குழந்தைகளுக்கான கத்னா செலவு மற்றும் ஏழை, எதீம், வழிப்போக்கர்களின் ஜனாஸா நல்லடக்கத்திற்கான வைப்புத்தொகையாக ரூபாய் ஐம்பதாயிரத்தை கமிட்டி பொருளாளரும், ஜின்னா தெரு செய்யதுல் ஹஸனாத் பள்ளி தலைவருமான ஹாஜி ஷஃபீக் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

கமிட்டிக்கு கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட அவை தலைவர்கள் விபரங்கள் பின்வருமாறு:

1) அல்ஹாஜ் சீனா தானா(எ) செய்யது அப்துல் காதர்
2) ஹாஜி ரத்தினமுகம்மது(வடக்குத்தெரு ஜமாஅத் தலைவர்)
3) ஜனாப் பானா ஆனா சேகு அபுபக்கர் சாஹிப்(கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர்)

கௌரவ ஆலோசகர்கள்:-

1) ஜனாப் எம்.கே.இ.உமர்(நிறுவனர் மக்கள் சேவை அறக்கட்டளை)
2) ஜனாப் பாரூக்(நடுத்தெரு ஜமாஅத் செயலாளர்)

தலைவர்:- ஹாஜி சாகுல்ஹமீது ஆலிம்(மின்ஹாஜ் பள்ளி ஜமாஅத் தலைவர்)

துணை தலைவர்கள்:-
1) ஹாஜி உமர் களஞ்சியம்(தெற்குத்தெரு ஜமாஅத் தலைவர்)

2) ஜனாப் செய்யது அபுதாஹிர்(பழையகுத்பா பள்ளி ஜமாஅத் தலைவர்)

செயலாளர்:- கீழை ஜஹாங்கீர் அரூஸி

துணை செயலாளர்கள்:-
1) ஹாஜா முகையதீன்(சுன்னத் ஜமாஅத் அறக்கட்டளை செயலாளர்)
2) மூர் ஹஸனுதீன்

பொருளாளர்:- ஹாஜி ஷஃபீக்

கமிட்டி உறுப்பினர்கள்:-
1) ஹபீப் முஹம்மது தம்பி(நடுத்தெரு)
2) ஹாஜா ஜலாலுதீன்(OJM தெரு)
3)ஜகுபர்ஹுசைன்(மின்ஹாஜ்பள்ளி தெரு)
4)அஜிஹர்(கிழக்குத்தெரு)
5) ஆபித் அலி(வடக்குத்தெரு)
6)லாஹிதுகான்(புதுத்தெரு)
7)சீனிமுகம்மது(சாலைதெரு)
8)சித்தீக்(கண்ணாடி வாப்பா அறக்கட்டளை)
9) அஹமது தம்பி கல்வத்தி
10) சிந்துபாத் ஹபீப்முகம்மது(சின்னக்கடைத்தெரு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இக்கூட்டத்தின் நிறைவில் KLK வெல்ஃபேர் கமிட்டி தலைவர் ஹாஜி சாகுல்ஹமீது ஆலிம் துஆ செய்தார்.

ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்.
கீழக்கரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *