திருவண்ணாமலை ஜன, 2
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் குளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.