சென்னை ஜன, 1
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்ததை அடுத்து டிசம்பர் 24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடிந்து 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பு நடைபெற இருப்பதால் அந்த வகுப்புகளுக்கு ஜனவரி 5 ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.