கோவை டிச, 28
கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 43 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 76 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.