பெரம்பலூர் ஆகஸ்ட், 10
பெரம்பலூரை அடுத்த க.எறையூர் அருகே பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மருவத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரத்து 400 ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக ராயல் நகரை சேர்ந்த ராஜா (வயது 40), ரஞ்சித்குமார் (37) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்