தஞ்சாவூர் டிச, 27
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் புரவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும் விளைநிலத்தில் போடப்பட்டுள்ள மண் சாலையை பார்வையிட்டார். பின்னர் அவர்களுடன் களத்தில் இறங்கினார். விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகும் சாலை பணி தொடந்தால் தான் நேரடியாக தடுப்பேன் என்றார்.