ஐதராபாத் டிச, 26
5 நாள் தெலுங்கானா பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று ஹைதராபாத் வருகிறார். இந்தப் பயணத்தின் போது ராமப்பா மற்றும் பத்ராச்சலம் கோவில்களுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்கிறார். ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சில உள்ளூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பதேபூர் ஸ்ரீ ராமச்சந்திர ஜி மகாராஜன் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு கல்வெட்டை திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.