புதுச்சேரி டிச, 25
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனே கிடைக்காது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது. மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சனை அதை உடனடியாக செய்ய முடியாத அதற்காக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். அங்கு அனுமதி பெற வேண்டும் இது அரசியலுக்காகவே சொல்லப்படுகிறது என்று விமர்சித்தார்.