திருப்புல்லாணி டிச, 25
தமிழகத்தின் திவ்ய தேசங்களில் ஒன்றான ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. விழாவின் முதல் நாளில் ஆதி ஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாஸ்னி தாயார் பட்டாபிஷேக ராமர் ஆகியோருக்கு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வருகிற ஒன்றாம் தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சியும் இரண்டாம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.