மண்டபம் டிச, 24
மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பொறிக்கப்பட்ட 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடாவை சேர்ந்த மண்டபம் கடலில் நேற்று விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இறால் குஞ்சுகள் பொறிக்கப்பட்டு கடலில் விடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.