துபாய் டிச, 22
ஐக்கிய அரபு அமீரக துபாயில் வணிகம் குழுவினர் நடத்திய உலகளவில் உள்ள தமிழ் நாடு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மூன்றாவது சந்திப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஐக்கிய அரபு அமீர துபாயில் ஏர்போர்ட் சாலையில் உள்ள புளோரா ஹோட்டலில் நடந்தது. இந்நிகழ்ச்சி வணிகம் குழு தலைவர் டாக்டர் கனகராஜா தலைமையில் அமைப்பின் உறுப்பினர் ஷங்கர் தொகுத்து வழங்க நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வணிக குழுமத்தின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புதிய தலைவராக பகவதி ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினராக துபாய் இந்திய தூதரகத்தின் வணிகத்துறை அதிகாரி காளிமுத்து, பிஎம் குரூப் சேர்மன் வீரமுத்து, மற்றும் கள்ளிடைகுறிச்சி முனைவர் முகைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கேப்டன் டிவி முதன்மை நிருபர் கேவிஎல் கமால், தமிழ் தேசிய நாளிதழ் தினகுரல் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, ஜெபக்குமார், டேஸ்டி பிரியாணி ஹனீபா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
கடந்த தலைமையில் வணிக அமைப்பு இயங்கும்போது குழுவிற்குள் சுமார் 9 மில்லியன் திர்ஹம்ஸ் வியாபாரம் கொடுத்து வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சி வணிக அமைப்பின் அமீரக தலைவர் பகவதி நன்றியுரையுடன் விருந்து உபசரிப்புடன் நிறைவுபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.