ஜப்பான் டிச, 21
ஜப்பானுக்கு வடகொரியா கடும் மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக தாக்குதல் திறனை அதிகரிக்க ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. ஜப்பானின் இந்த புதிய ராணுவ கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா ஜப்பானுக்கு எதிராக வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது.