கடலூர் டிச, 21
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தமிழக கடலோர பகுதியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. மேலும் வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடலூர் துறை முகத்தில் இருந்து அனைத்து வகையான விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.