ராமநாதபுரம் ஆகஸ்ட், 10
கலை, பண்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மூன்று வருட சான்றிதழ் வகுப்பாக, குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் போன்ற துறைகளுக்கு மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இதற்கான கல்வித்தகுதி ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு – 12வயது முதல் 25வயது வரை,கட்டணம் வருடத்திற்கு ரூபாய் 350 வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலவச பேருந்து வசதி, இலவச பாடநூல் மற்றும் மாதம் ரூ.400 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு,
+91 94432 07376 & 04567 220104
dmsramnad@gmail.com ; www.artandculture.tn.gov.in தொடர்பு கொண்டு மாணவ, மாணவியர்கள் தங்கள் இசைத் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.