ராமநாதபுரம் டிச, 17
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு முதல் நாள் கூட்டம் ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் கேரள மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் நிறுவனர் மற்றும் அமைச்சர் நீலலோகிதாசன் தலைமையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே மஸ்தான் கேரள வனத்துறை அமைச்சர் சுசீந்திரன் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா தலைவர் நற்றமிழ்செல்வன், துணைத்தலைவர் சுந்தரம் (அப்பா மெடிக்கல்) செயலாளர் குகன், இணைச் செயலாளர் அப்துல் பாசித், ஒருங்கிணைப்பாளர் சம்சுல் கபீர், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு காமராஜரின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது சேவைகள் குறித்து உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட துணை நகர மன்ற தலைவர் ஹமீது சுல்தான், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக ஊடகவியலாளர் காமராஜரின் கொள்கையை பின்பற்றும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கேரளா உத்தரகாண்ட் போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து காமராஜரின் கொள்கைகளை பற்றி சிறப்புரையாற்றி காமராஜரின் கொள்கைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் இதழை வெளியிட்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இரண்டாம் நாள் கூட்டம் நாளை நடைபெறும்.