Spread the love

கீழக்கரை டிச, 22

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிரதான நகர் முழுவதும் போடப்பட்ட பேவர் பிளாக் சாலைகள் பல்வேறு காரணங்களுக்காக குழி தோண்டப்பட்டு பின்னர் சாலைகளை முறையாக பராமரிக்காமல் அப்படியே போடப்படுவதால் அந்த சாலை வழியே பயணிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், மருத்துவமனை செல்லும் முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்துடனே பயணிக்கும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சாலைப் பயணம் என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் பிரதான இடம் பிடித்ததாகும். சிறு சிறு சாலை சீரமைப்புகளின் பணிகள் நடைபெறும் போது அப்பணிகள் முடிந்த பிறகு தோண்டிய குழிகளை மூடுவது, உடைந்த சாலை பள்ளங்களை சரி செய்வது என சீரமைப்பு பணிகளை சரிவர முடிக்காமல் அப்படியே விடுவதால் இந்த சூழ்நிலை ஏற்படுகிறது.

இச்சூழ்நிலையால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சிறு விபத்துகளால் தவறினால் கூட உயிரிழக்கும் அளவிற்கு அபாயகரமான நிலை ஏற்படுகிறது.

எனவே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், கீழக்கரை நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் அந்தந்த வார்டுகளின் உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு பொது மக்களின் கோரிக்கைகளை சரி செய்து தருமாறு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூகத் தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுக்கின்றது.

மாவட்ட செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் கவனத்திற்கு..,

அது மட்டுமல்லாமல் ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களின் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் ஏனென்றால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இப் பிரச்சனையின் எதிரொளிப்பை பொதுமக்கள் தங்களது ஓட்டுக்களில் தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு சாதாரண இந்த சாலை பிரச்சனையை கையாளும் விதம் குறித்து பொதுமக்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்‌.

அதுமட்டுமின்றி கீழக்கரையில் தொழிலதிபர்கள் பல முக்கிய பிரமுகர்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் நேரடி தொடர்பில் இருந்து வருகின்றனர். அவர்களும் இந்த பிரச்சனையை கவனித்துக் கொண்டே வருகின்றனர். பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பொதுமக்களின் இக்கோரிக்கைக்கு தீர்வு காணாவிடில் இவரின் பதவியும் அதிகாரமும் பொதுமக்களின் பார்வைக்கு கேள்விக்குறியாகி விடும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தை முன்னுதாரணமாக தமிழக முதல்வருக்கு எடுத்துக்காட்ட காத்திருக்கும் மாவட்ட செயலாளர் உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு இது ஒரு சவாலாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கீழக்கரையில் இது போன்ற பொதுமக்களின் பல பிரச்சனைகளை சட்ட மன்ற உறுப்பினர் தனிக் கவனம் செலுத்தி முற்றுப்புள்ளி வைக்கும் பட்சத்தில் நமது சட்ட மன்ற உறுப்பினருக்கு அமைச்சராகும் வாய்ப்புகள் கூட கிடைக்கலாம் என பொதுமக்கள் தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது.

வாக்குறுதிகளோடு மட்டும் நின்றுவிடாமல் ஆளும் கட்சி கண்டிப்பாக இந்த பிரச்சனையை சீர் செய்து விடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விடியலை நோக்கி… காத்திருக்கும் பொதுமக்கள்….

ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.

One thought on “சீரமைக்கப்படாத கீழக்கரை சாலைகள். பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கும் அவலம்.”
  1. சிறந்த கருத்து சுதந்திரத்தை துணிவுடன் வெளியிடும் இதழாகும் கருதுகிறேன்.ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்புறம் பிரதான வாயில் முன்பு சுமார் 150மீ சாலை கரடுமுரடாக கற்கள் வெளியில் நீட்டிக்கொண்டு மற்றது.புகார்கொடுத்து 2 வருடங்களாகியும் சீர்படுத்த வில்லை.தேர்தல் அறிக்கையில் இவ்வூருக்காகக் கொடுத்த தேர்தல் அறிக்கையில் ஒன்று மின்கட்டண வசூல்அலுவலகம் ஊருக்குள் மீண்டும் திறக்கப்படும் என.இதைக்கூட நிறைவேற்ற வில்லை.பேருந்து நிலையத்தில் டைம்டேபில் நேர புதிய அட்டவணை பலகை
    இல்லை.கடற்கரை நிலையத்தில் டவுன் பஸ் நேர அட்டவணை இல்லை இல்லை.நகராட்சியில் மெஜாரிட்டி பலமுள்ள தால் மக்கள் கோரிக்க மதிப்பளிக்க மாட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *