சென்னை டிச, 16
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாகத்தில் சிறந்த மாற்றத்தை உருவாக்கும் வகையில், உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிராம ஊராட்சிகளுக்கு 5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு 25 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு 50 லட்சம் வரையிலும் நிதி அதிகாரத்தினை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
