சென்னை டிச, 16
ஆதார்-மின் இணைப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தேவைப்பட்டால் ஆதார் மின் இணைப்புக்கு கூடுதல் சிறப்பு முகாம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மின்வாரியம் தயாராக உள்ளது என்றார். டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நாளைத் தவிர மற்ற விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறினார். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
