சென்னை டிச, 15
ராணுவ நலன் வேலைவாய்ப்பு மையம் சார்பில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பட்டப்படிப்பு முடித்த ராணுவ வீரர்களின் வாரிசுகள் பங்கேற்கலாம். இந்த முகாமில் 15 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள சைனிக் இன்ஸ்டியூட்டில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
