கள்ளக்குறிச்சி டிச, 14
சங்கராபுரம் ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட உலகுடையாம்பட்டு மற்றும் சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது.
அதன் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவின்பேரிலும் உதவி திட்ட அலுவலர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ் ஆகியோர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களிடம் ஆய்வு நடத்தினர்.