புது டெல்லி டிச, 11
டெல்லி மாநகராட்சி தேர்தலில் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா பதவி விலகினார். தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஆதேஸ் குப்தா பாஜக தலைமையிடம் கடிதம் அளித்திருந்தார். ஒப்புதல் அளித்திருந்த பாஜக தலைமை துணைத்தலைவராக இருந்த வீரேந்திர சத்தேவா இடைக்கால தலைவராக நியமனம் செய்துள்ளது.