மதுரை டிச, 8
மதுரை கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகம் மற்றும் மதுரை கூட்டுறவு ஒன்றியம் இணைந்து கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வி முகாமை மதுரை அருகே உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடத்தியது.
பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் அருள் பிரகாசம் வரவேற்றார். மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜீவா, கூட்டுறவுச் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை எடுத்துரைத்துரைத்தார். கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகத்தின் இயக்குநர் தர்மராஜ் கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.