துபாய் டிச,5
ஐக்கிய அரபு துபாயில் டேஸ்டி பிரியாணி நிறுவனம் சார்பில் அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம் டேஸ்டி பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் ஹனீபா தலைமையில் துபாயில் உள்ள மம்சார் பூங்காவில் ஆடல் பாடல் நடனம், விளையாட்டுகள் என்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இக்கொண்டாட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள், திறன்களை ஊக்குவிக்கும் விதமான நடனங்கள் பரதநாட்டியங்கள் பாடல்கள் விளையாட்டு போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அறிவோம் தெளிவோம் மருத்துவர் மோனிகா, கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நிருபர் கேவிஎல் கமால், ஈமான் பொதுச் செயலாளர் யாசின்,டிக்டாக் வலயதலத்தை சேர்ந்த ஆண்ட்ரோ, விக்னேஷ் வெங்கடாசலம், பாடகர் ஜனனி, அப்துல்லா கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.