சென்னை நவ, 30
டிசம்பர் 26 ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் சிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழி தேர்வாக நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. ஏற்கனவே இத்தேர்வு டிசம்பர் 22ம் தேதி 7 தேர்வு மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 26 ம் தேதி நடைபெறும் என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.