புதுடெல்லி நவ, 30
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என எச்சரித்துள்ளனர். விதிகளை மீறி எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என ரயில்வே காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.