இங்கிலாந்து நவ, 30
இங்கிலாந்து சீனா இடையேயான பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தங்கள் நாட்டின் மதிப்புகள் நலனுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக சீனா ஹங்காயில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.