கள்ளக்குறிச்சி நவ, 28
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் காலி பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு இணையவழியாக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கும்,வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் இராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நபர்களுக்கும், எழுத்து தேர்வு டிசம்பர் 4 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுக்கான நுழைவுத் தேர்வு சீட்டு விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
இக்குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்ளத் தெரியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் இராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நபர்களுக்கான நுழைவுச்சீட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.