திருப்பூர் நவ, 28
திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மாவட்ட தலைவர் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொதுக்குழுவின் வரவேற்புரையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வழங்கினார். 2021-2022 ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை மாவட்ட பொதுச் செயலாளர் ஹிதாயத்துல்லா சமர்பித்தார்.
பொது குழுவிற்கு கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸ்ருதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவர் ஜாபிர் அஹமது பங்கேற்றார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.டி.யூமாவட்ட தலைவர. முஜிபுர் ரஹ்மான், வர்த்தக அணி மாவட்டதலைவர் பாபு
விம் இந்தியா மூவ்மெண்டின் மாவட்டத் தலைவர் பாத்திமா முஸ்தபா பொதுக்குழு
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தொகுதி கிளை மற்றும் துணை அமைப்புகள் மற்றும் கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பொதுக்குழுவின் கீழ்க்கண்ட நிறைவேற்றப்பட்டன.
டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாசிச எதிர்ப்பு தினத்தில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மற்றும் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி நடத்துவதெனவும், திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் புதிய கிளைகள் உருவாக்க வேண்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மேலும் வரக்கூடிய பாராளுமன்றம் பாசிச பிஜேபியை தோற்கடிக்க தேர்தல் களத்திற்கு தேவையான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது .
திருப்பூர் பொது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் ஆமை வேகத்தில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வெகு விரைவாக முடிக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை இந்த மாவட்ட பொதுக்குழுவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம் எனவும், திருப்பூரின் பனியன் தொழில்கள் பாதுகாக்க அதை சார்ந்து இருக்கும் சிறு கூறு தொழிலாளர் பயன்பெறும் வகையில் வார பனியன் சந்தை ஒன்று திருப்பூரில் அமைக்க வேண்டும் எனவும் நிறைவேற்றப்படுகிறது.
வருடத்திற்கு ஒரு முறை திருப்பூரின் மையத் தொழிலாக இருக்கும் பனியன் தொழில் இரண்டாம் தர பனியன் தொழில் கண்காட்சி நடத்த வேண்டும் எனவும், போதையில் பாதிக்கப்படும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக மாவட்ட தலைமை அலுவலகத்தில் போதை பழக்கத்தால் அவதிப்படும் நபர்களுக்கு இலவச மணல ஆலோசனை மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கான நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க தினசரி ஒரு மணி நேரம் வரக்கூடிய வருடத்தில் உருவாக்கப்படும் என பொதுக்குழுவின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மேலும் ஏழு தமிழர்கள் விடுதலை போன்று பல வருடங்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய உள்ளிட்ட
ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்டச் செயலாளர். அன்வர் பாஷா நன்றியுரை வழங்கினார்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.