துபாய் நவ, 27
ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசியதினத்தை முன்னிட்டு துபாய் மம்ஸார் பகுதியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் பிரமாண்டமான பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இப்பேரணியில் 51 குழந்தைகள் அமீரகத்தின் தேசிய கொடியுடன், 51 சைக்கிள், 51 பெண்கள், 51மீட்டர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடியேந்தி 51 வாகனங்களின் அணிவகுப்புடன் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக அமீரகத்தைசேர்ந்த ஸாலிம் பின் அவாத் அல் காதிரி, மற்றும் மலையாள நடிகை ஷீலா பிந்து, பால் பிரபாகர், அரவிந்த், குழும நிறுவனங்களின் நிறுவனர், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் யாசின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் மக்கள் ஆர்.ஜே சாரா, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை செய்தியாளர் நஜீம் மரிக்கா, கேப்டன் டிவி மூத்த நிருபர் கே.வி.எல்.கமால், அறிவோம் தெளிவோம் ஆர்.ஜே மோனிகா டிக்டாக் பிரபலங்கள், துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள், அருணா மொழில், ஆண்ட்ரோ, கருவாயன், கல்ப் கட்ஸ் பிரவின், புல்லிங்கோ ஷாநவாஸ், அயாஸ், ஜனனி, மற்றும் புல்லிங்கோ குழுவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி குறித்து அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா கூறுகையில்,
இது ஒரு வெற்றிகரமான நிகழ்வாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறோம் எனவும் மேலும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த ஆதரவாளர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள் என மகிழ்வுடன் தெரிவித்தார்.
மேலும் அமீரகத் தமிழ்ச் சங்க கொண்டாட்டத்தில் ஊடக பங்குதாரரான நமது வணக்கம் பாரதம் வார இதழை பாராட்டி அமீரகத்தின் செய்திப் பிரிவு முதன்மை செய்தியாளர் நஜீம் மரைக்கா அவர்களிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வணக்கம் பாரதம் வார இதழ் சார்பாக நாமும் இந்நிகழ்வு குறித்து பெருமிதம் கொள்கிறோம்.
நஜீம் மரைக்கா. முதன்மை செய்தியாளர். அமீரக செய்திப் பிரிவு.