ராமநாதபுரம் நவ, 26
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் பத்து தேர்வு மையங்களில் 9990 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் ஒழுங்கீன செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.