கள்ளக்குறிச்சி நவ, 25
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு விவசாய இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகி வேல்மாறன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டக்குழு நிர்வாகி ராஜா, தாண்டவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.