Month: October 2022

ஆரணி ஆற்றின் கரைகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு.

திருவள்ளூர் அக், 4 பொன்னேரி தாலுகாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவ மழையினால் ஆரணி ஆற்றின் கரைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு பகுதிகளான ஆலாடு, மனோபுரம், சோமஞ்சேரி, பெரும்பேடு குப்பம், ஆண்டார்மடம், பிரளயம்பாக்கம், மற்றும் தத்தைமஞ்சி காட்டூர் ஆகிய…

பொன்னியின் செல்வன் 1 படத்தின் மொத்த உலக வசூல் 4 நாட்களில் 250 கோடி ரூபாய்.

சென்னை அக், 4 கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன்,…

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

கோயம்புத்தூர் அக், 4 பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பொங்காளியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் சிலர் வீடுகளில் உள்ள குழாயில் மோட்டார் அமைத்து குடிநீரை ஊறிஞ்சு எடுப்பதாக…

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை அக், 4 புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உடல் எடை பிரிவில் 50 கிலோ முதல் 75 கிலோ வரைக்கும், அதற்கும் மேலும், மாஸ்டர்கள் பிரிவிலும் போட்டி நடைபெற்றது. இதில் மாஸ்டர்கள் பிரிவில்…

இயற்பியலுக்கான நோபல் பரிசு

ஸ்வீடன் அக், 4 பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியா விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வுமருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி 2022ம் ஆண்டிற்கான நோபல்…

நவம்பர் மாதம் முதல் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை அறிமுகம்.

புதுடெல்லி அக், 4 ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்குப் பின்பு டெலிகாம் துறை பெரிய அளவில் மாறியுள்ளது, 3ஜி சேவைக்காக அல்லாடிக்கொண்டு இருக்க மக்களுக்கு 4ஜி சேவை மிகவும் எளிதாக அதே நேரம் மலிவான விலையும் கிடைத்தது. இந்த நிலையில் தனியார் டெலிகாம்…

தங்கம் விலை கிடு கிடு உயர்வு- சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு

சென்னை அக், 4 நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து,…

மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

நாமக்கல் அக், 4 மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம்…

காலி பணியிடங்களை நிரப்ப கோரி அங்கன்வாடி பணியாளர்கள் நூதன போராட்டம்.

நீலகிரி அக், 4 அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், ஊட்டி ஏ.டி‌.சி. திடலில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து…

கடலாடியில் தசரா விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் அக், 4 ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் பத்ரகாளியம்மன் தசரா குழுவினர் மகாகாளி பூஜை, கும்பம் வீதி உலா, தசரா திருவிழா நடைபெற்றது. குலசை ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் மகாகாளி பூஜையையொட்டி அம்மனுக்கு அலங்காரம் சிறப்பு பூஜை, பஜனை…