கீழக்கரை நவ 5,
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் காமராஜரின் புகழையும் அவரது கொள்கைகளையும் இந்தியாவெங்கும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தேசிய மாநாட்டை வருகின்ற 17 மற்றும் 18 டிசம்பர் 2022 ல் ராமநாதபுரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்க வளாகத்தில் நடைபெற்றது.
அதில் காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தேசிய மாநாட்டை வெகு சிறப்பாக வெற்றிகரமாக ராமநாதபுரத்தில் உள்ள ஹாஜா மஹாலில் நடத்துவது என்றும், அம்மாநாட்டில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை அழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் மற்றும் கீழக்கரை காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் அமைப்பாளர்களான ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் எஸ். சம்சூல் கபீர், முன்னாள் தலைவர் எஸ்.சுந்தரம், கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்கத்தின் தலைவர் ஜெயமுருகன், ரோட்டரி சங்க பொறுப்பாளர் பொறியாளர் சுப்ரமணியன், ஹெச்.எஸ். ஹமீது அப்துல் காதர், ஏ. அப்துல் பாசித், எஸ். சபிருக், சேகு முகைதீன், வன்னியராஜா, நா. செல்வ விநாயகம், பாண்டி, நவீன் பாலாஜி மற்றும் ஜாபர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நஜீம் மரைக்கா. முதன்மை செய்தியாளர்.அமீரக செய்திப் பிரிவு.