ராமநாதபுரம் அக், 31
ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் 60 வது குருபூஜை விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் உள்ளனர்.