ராமநாதபுரம் அக், 9
ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் பிற்பகலில் திடீரென மின்சாரம் ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது. திடீரென்று 260 வோல்டேஜ்க்கு மேல் மின் சப்ளை ஆனது.
இதனால் ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்சாதனங்கள் திடீரென்று பழுதானது. அதிக மின்னழுத்தம் காரணமாக ஏ.சி., குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், தொலைக்காட்சி உள்ளிட்டவைகள் பழுதானதாக அப்பகுதியினர் கூறினர்.