துபாய் ஏப், 28
ஐக்கிய அரபு அமீரக துபாய் ஊத் மேத்தா பகுதியில் லாம்சி பிளாசா எதிரே செயல்படும் ராகம் சைவ உணவகம் தனது மூன்றாவது கிளை உணவகத்தை துபாய் அல் கிசஸ் பகுதியில் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு திறக்கப்பட்டது.
இக்கிளை உணவகத்தினை தென்னிந்திய பிரபல நடிகையான ரெஜினா கஸன்றா உணவகத்தின் நிறுவனர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் வளைகுடா முதன்மை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா உள்ளிட்ட பல பிரபல ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியினை ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா மற்றும் ஸ்பிரேட் ஸ்மைல் குழுவினர்கள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் ராகம் உணவகத்தின் நிறுவனர்கள் மஹாதிர் முஹம்மது, முஹம்மது கமாலுதீன், அம்ஜத் பாஷா அன்வர் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்று அனைவருக்கும் நன்றி கூறி கௌரவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.