ராமேஸ்வரம் ஏப், 8
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டு வழக்கம் போல் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.ப 2 1/2ஆண்டுகளுக்கு பிறகு வரும் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கவிருகும் 16733/16734 ராமேஸ்வரம் – ஓகா – ராமேஸ்வரம் ரயில்!!!
இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரங்களின் விபரம்:-
சனிக்கிழமை அதிகாலை 4:30 – 16733 – ஓகா விரைவு ரயில் மற்றும் வியாழன் மதியம் 12:30 – 16734 ராமேஸ்வரம் விரைவு ரயில்
இந்த ரயில் இனி ராமேஸ்வரம் ரயில்நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை வழியாக நாமக்கல் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை அதிகாலை 4:29 மணிக்கு வந்து 4:30 மணிக்கு புறப்பட்டு காட்பாடி ,திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, டோன், கர்னூல் சிட்டி, காச்செகுடா, நிஜாமாபாத், நந்தேத், ஜல்னா, அவுரங்காபாத் நாகர்சோல், மன்மத், சூரத், அகமதாபாத், ராஜ்கோட், ஜாம்நகர், துவாரகா வழியாக ஓகா சென்றடையும்.
மீண்டும் ஓகாவில் செவ்வாய் காலை 8:40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அகமதாபாத், ஹைதராபாத், திருப்பதி வழியாக வியாழன் மதியம் 12:29 மணிக்கு வந்து 12:30 மணிக்கு புறப்பட்டு மதுரை, இராமநாதபுரம் வழியாக இரவு 7:10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
இந்த ரயில் மூலம் நாமக்கலில் இருந்து ராமேஸ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, காட்பாடி ,திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, டோன், கர்னூல் சிட்டி, காச்செகுடா, நிஜாமாபாத், நந்தேத், ஜல்னா, அவுரங்காபாத் நாகர்சோல், மன்மத், சூரத், அகமதாபாத், ராஜ்கோட், ஜாம்நகர், துவாரகா, ஓகா போன்ற பகுதிகளுக்கு எளிதாக சென்று வரலாம்.
மீண்டும் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவைக்கு பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்து நன்றி கூறி வருகின்றனர்.