கீழக்கரை ஆகஸ்ட், 14
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகள் கோகுல் நகர் அங்கே அங்கன்வாடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொன்விழா ஆண்டாக கருதி ஆகஸ்ட் 13 அன்று அங்கன்வாடி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இந்தநிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் அங்கன்வாடி பணியாளர் இளையராணி, அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்களை அழைத்து சிறப்பான ஏற்பாடுகளை செய்தார். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து குழந்தைகள் மாறுவேடத்தில் கலந்து கொண்டார்கள் பல போட்டிகள் வைக்கப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.