கீழக்கரை ஜன, 26
ராமநாதபுரம் மாவட்டத்தில் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் கொடியேற்றி வைத்து விழா பேருரையாற்றினார். விழாவில் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ்,மருத்துவர்கள் ராஜேஸ்வரன், கீர்த்தனா, தலைமை செவிலியர் ராவியத்தும்மா மற்றும் பணியாளர்கள்,செவிலியர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா கொடியேற்றினார். ஆணையர் செல்வராஜ், ஓவர்சீயர் சாம்பவசிவம்,சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகர்மன்ற உறுப்பினர்கள், நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது மற்றும் நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மஹ்தூமியா தொடக்கப்பள்ளியில் ஜமாத் பிரமுகர் அலி லாப்ரின் கொடியேற்றினார்.பள்ளியின் துணை தாளாளரும் நகர்மன்ற உறுப்பினருமான மூர் நவாஸ் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் செய்யது அபுதாஹிர்,செயலாளர் மூர் ஜெய்னுதீன்,பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன்,இஃப்திஹார் ஹசன்,பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஆனந்தி பிரேமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சியினை பள்ளியின் தலைமையாசிரியை முகம்மது ரிஸ்வானா சிறப்பாக செய்திருந்தார்.
மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளியில் அபுபக்கர் சித்தீக் ஆலிம் கொடியேற்றினார்.பள்ளியின் முன்னாள் தாளாளர் AKS ஹிதாயத்துல்லா தலைமையேற்று சிறப்புரையாற்றினார். பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி வரவேற்றார்.
இவ்விழாவில் பள்ளி தாளாளர் இஃப்திஹார் ஹசன்,ஜமாத் செயலாளர் மூர் ஜெய்னுதீன்,பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன்,நகர்மன்ற உறுப்பினர்கள் மூர்நவாஸ்,சித்தீக் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 74வது குடியரசு தின விழா நடைபெற்றது.மேல்நிலைப்பள்ளியில் கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் சேகபுபக்கர் தலைமையில் ஹபீப்முகம்மது கொடியேற்றினார். பள்ளியின் தலைமையாசிரியர் முகம்மது மீரா வரவேற்றார்.பள்ளி தாளாளர் முகம்மது சுஐபு, முன்னாள் தாளாளர் டாக்டர் சாதிக் ஆசிரியர்கள் ராஜமன்னார் சந்திரமோகன், செய்யது அபுதாஹிர் வாழ்த்துரை வழங்கினர். உதவி தலைமையாசிரியர் சௌகர் சாதிக் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.