மதுரை நவ, 15
ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா வின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், அ.தி.மு.க.வின் 51-வது பொன்விழாவை முன்னிட்டும், ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் பிப்ரவரி 23 ம் தேதி, டி. குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் 51 ஏழை எளிய மணமக்களுக்கு, இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதில் முன்னாள் மூத்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.