நாகர்கோவில் ஆகஸ்ட், 6
ஆள்சேர்ப்பு முகாம் மத்திய அரசின் திட்டமான அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 21-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இம்முகாமை திருச்சியில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு மையம் நடத்த உள்ளது. நாகர்கோவிலில் நடைபெறும் முகாமில் குமரி உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். 33 ஆயிரம் பேர் விண்ணப்பம் இந்தநிலையில் இந்த ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். ராணுவ ஆள்சேர்ப்பு மைய திருச்சி மண்டல இயக்குனர் திலீப்குமார் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், ராணுவ அதிகாரிகள், பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in