கோயம்புத்தூர் ஆகஸ்ட், 6
பொள்ளாச்சி கொப்பரை தேங்காயை கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கேரளாவை போன்று முழு தேங்காயை கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.50-க்கு கொள்முதல் செய்து, அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தை கோவையில் செயல்படுத்த வேண்டும். உரம், பூச்சி மருந்து, எந்திரங்களை முழுவதும் மானியத்துடன் வழங்க வேண்டும்.
மேலும் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும். ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும். ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில குழுவை சேர்ந்த ஸ்டாலின் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில்,மாநில தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in